சென்னை பல்லாவரத்தில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தை ஒட்டி GST சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: சென்னை பல்லாவரத்தில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தை ஒட்டி GST சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேம்பாலத்தின் இரண்டு புறத்திலும் சாலை மிக குறுகியதாக அமைக்கப்பட்டது காரணம்என்று அவர்கள் கூறியுள்ளனர்.

சென்னை மாநகரத்துடன் புறநகர் மற்றும் தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது GST சாலை இந்த GST சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்வதால் மீனம்பாக்கம் முதல் தாம்பரம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இதற்கு தீர்வு காணும் வகையில் பல்லாவரத்தில் ரூ. 82 கோடி செலவில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு மூன்று வழி சாலையாக மேம்பாலம் கட்டப்பட்டு 2021ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த பலத்தை ஒரு வழி பாதையாக அறிவித்த நெடுஞ்சாலை துறை தாம்பரத்தில் இருந்து மீணாம்ப்பாகம் மார்கமாக செல்லும் வாகனங்களை மட்டும் அனுமதிக்க முடிவு செய்தது. இதனால் எதிர் திசையில் அதாவது தாம்பரம் நோக்கி வரும் வாகனங்கள் பல்லவரத்தை தரை வழி சாலையில் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சாலை மேம்பாலத்தை நெருங்கும் போது புனல் வடிவில் குறுகிய வடிவில் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். பல்லாவரம் புதிய மேம்பாலத்தை ஒட்டிய இரண்டு புறமும் உள்ள சாலையை விரிவு படுத்தினால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

சாலை விரிவாக்கம் செய்ய கையகப்படுத்த வேண்டிய இடங்கள் ராணுவ மற்றும் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் ஆகும். இதனால் உரிய அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது, எனினும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முயற்சியின் பேரில் மேம்பாலத்தை ஒட்டிய GST சாலையின் அருகே உள்ள இடத்தை கையகப்படுத்தி சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.    

Related Stories: