ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் சட்டமன்றத்தை ஆளுநர் அவமதிக்கிறார்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் சட்டமன்றத்தை ஆளுநர் அவமதிக்கிறார் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 3 மாதமாக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதுதான் மர்மமாக உள்ளது என்று கூறியுள்ளார். அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். ஆன்லைன் விளையாட்டுகளை வெல்லக்கூடிய தொகைக்கு ஒன்றிய அரசு வரி விதிப்பது கொடுமை எனவும் கூறியுள்ளார்.

Related Stories: