பிரபாகரன் உயிரோடு இருந்தால் சந்திப்பேன்: கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி

சென்னை: ‘பிரபாகரன் உயிரோடு இருந்தால், அவரை நான் நேரில் சந்திப்பேன்’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றி நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாகி வருகிறது. கூட்டணி கட்சி தலைவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். வரும் 14,15,16 ஆகிய தேதிகளில் நான் அங்கு பிரசாரம் செய்ய இருக்கிறேன். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் 15ம் தேதி பிரசாரம் செய்கிறார். கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். அரசியல் கருத்துக்களை மரபு மீறி அவர் பேசுகிறார். பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் கூறுகிறார். பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி தான். அவரை நான் நேரில் சந்திப்பேன். அதில் மாற்று கருத்து ஒன்றும் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்கிரஸ் கட்சி தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக சொல்வது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

Related Stories: