முகத்தை அடையாளம் காணும் வகையில் ஏடிஎம்களில் சாப்ட்வேர் கொண்ட கேமராக்கள் பொருத்தம்: வங்கிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தல்

சென்னை: முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய கேமராக்கள், ஏடிஎம்களில் பொருத்த வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 12ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில், 4 ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் திருடப்பட்டது தொடர்பாக அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகளுடன், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். இதில் 51 பொது மேலாளர்கள் மற்றும் பொறுப்பு பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் உள்ள பணத்தை கண்காணிக்க மறைமுக கேமரா நிறுவ வேண்டும். முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய கேமராக்கள் அனைத்து ஏடிஎம்களிலும் பொருத்த வேண்டும். ஏடிஎம்கள் உடைக்கப்படும்போது எச்சரிக்கை மணி அங்கே ஒலிக்கவும் மற்றும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒலிக்க வழிவகை செய்ய வேண்டும் போன்ற பல்வேறு திருட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: