ஸ்ரீகாளஹஸ்தியில் மகா சிவராத்திரி பிரமோற்சவம் தேர் திருவிழா, தெப்போற்சவங்களில் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படும்-டிஎஸ்பி தகவல்

ஸ்ரீகாளஹஸ்தி : ஸ்ரீகாளஹஸ்தியில் மகா சிவராத்திரி பிரமோற்சவத்தின் தேர் திருவிழா, தொற்போற்சவங்களில் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படும் என்று டிஎஸ்பி விஸ்வநாத் தெரிவித்துள்ளார். திருப்பதி மாவட்டம்,ஸ்ரீகாளஹஸ்தி டிஎஸ்பி விஸ்வநாத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருகிற 13ம் தேதியிலிருந்து 26ம் தேதி வரை மகா சிவராத்திரி பிரமோற்சவம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று எஸ்பி பரமேஸ்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, கூடுதல் பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்கப்பட்டு இருக்கிறது. அதில் கூடுதல் எஸ்பி ஒருவர்,  இன்ஸ்பெக்டர்கள் 10, சப்-இன்ஸ்பெக்டர்கள் 15 உட்பட துணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 25 பேர் உட்பட சுமார் 800 கூடுதல் போலீஸ் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில்  ஈடுபட உள்ளனர். இவர்களுடன் என்சிசி மற்றும் என்எஸ்எஸ்(வாலின்டர்கள்) செயலாளர்களின்(உதவியையும்) சேவையையும் பயன்படுத்த உள்ளளனர். கடந்த ஆண்டுகளில் நடந்த தவறுகளை சரி செய்து கொண்டு மீண்டும் இந்தாண்டு அதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

கலெக்டர் அறிவுரையின்பேரில் பாதுகாப்பை குறித்து கண்காணித்து வருகிறோம். சிறுவர்கள் பெற்றோர்களிடமிருந்து காணாமல் போகாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு குழந்தையின் கைகளிலும் சிறப்பு (டேக்) கயிறுகளை கட்ட உள்ளோம். இந்தாண்டு கூடுதலாக கோயிலின் அனைத்து பகுதிகளிலும்  பூட்டுகள் இல்லாத வரிசைகளை ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மகா சிவராத்திரி, லிங்கோத்பவ தரிசனம், தேர் திருவிழா, தெப்போற்சவம், சுவாமி அம்மையார்களின் திருக்கல்யாண உற்சவம் உட்பட பல்லக்கு சேவையிலும் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

பேருந்துகள் நகருக்குள் அனுமதிக்கபடமாட்டாது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக (பார்க்கிங்) வாகனங்கள் நிறுத்துமிடங்களை கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு வாகனத்திலும் அந்தந்த வாகனத்தின் டிரைவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். தேர் திருவிழா மற்றும் தெப்போற்சவங்களில் ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தப்படும். குறிப்பாக, சிவன் பார்வதி திருக்கல்யாண உற்சவ சமயத்தில் நடக்கும் குழந்தை திருமணங்களை தடுக்க தனி கவனம் செலுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Related Stories: