சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான இணைய தளம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. நடப்பு 2022-23ம் கல்வி ஆண்டு முதல் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை பெற்ற மாணவர்களே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் ஆதார் எண், அதனுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண், வங்கி கணக்கு எண், இணைய வழியில் பெறப்பட்ட வருவாய் சான்று மற்றும் சாதிச் சான்று உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
