ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டிக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: