கடலூர் மாவட்டத்தில்தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1790 வழக்குகளுக்கு தீர்வு: 33 கோடிக்கு உத்தரவு

கடலூர்: கடலூரில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு, புது டெல்லி மற்றும்t தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, அறிவுறுத்தலின்படி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம், கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின், தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நீதிபதிகள், தொழிலாளர் நீதிமன்ற  நீதிபதி, சுபா அன்புமணி, எஸ்சி, எஸ்டி நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ், கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர், முதன்மை சார்பு நீதிபதி பொ லிங்கம்.கூடுதல் சார்பு நீதிபதி-1 மோகன் ராஜ், கூடுதல் சார்பு நீதிபதி-11, அன்வர் சதாத், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி, கமலநாதன், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1,  வனஜா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-111 ரகோத்தமன், முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் தலைவர் துரை பிரேம்குமார், செயலாளர் செல்வகுமார், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் ராமநாதன், செயலாளர் ராம்சிங், வழக்கறிஞர்கள், காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் கலந்துகொண்டனர். மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றம் கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, பரங்கிப்பேட்டை மற்றும் காட்டுமன்னார்கோவில், நீதிமன்றங்களில் அந்தந்த நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 13 அமர்வுகள் மூலம் சுமார் 7,071 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கெள்ளப்பட்டு 1,790 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 33,07,84,372 தொகை உத்தரவிடப்பட்டது. விருத்தாசலம்: விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய லோக் அதாலத் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி பிரபாசந்திரன் தலைமை தாங்கினார்.

முதன்மை சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் ஜெகதீஸ்வரி முன்னிலை வகித்தார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சுரேஷ் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 அன்னலட்சுமி ஆகியோர் இரண்டு அமர்வாக அமர்ந்து மோட்டார் வாகன விபத்து காப்பீடு வழக்குகள், சிவில் வழக்குகள் என மொத்தம் 162 வழக்குகளுக்கு 2 கோடியே, 72 ஆயிரத்து, 443 ரூபாய்க்கான தீர்வு காணப்பட்டது. முதுநிலை நிர்வாக உதவியாளர் அஸ்வத்தராமன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

திட்டக்குடி வட்ட சட்டப்பணிகள் குழு தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் மெகாலோக் அதாலத் நடைபெற்றது. இதில் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான கணேஷ் தலைமையில் நிலுவையில் இருந்த 90 வழக்குகளுக்கு 68 லட்சத்து 23 ஆயிரத்து 687 ரூபாய் மதிப்புள்ள வழக்குகள் தீர்வு காணப்பட்டன. மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி நித்தியகலா, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அன்பு மற்றும் அரசு கூடுதல் வழக்கறிஞர் கண்.ராதாகிருஷ்ணன், அரசு வழக்கறிஞர் பாண்டியன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் குமார், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: