அண்ணா தொழிற்சங்கத்தினர் கைதுக்கு எடப்பாடி கண்டனம்

சென்னை: கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய, அண்ணா தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டதற்கு, எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் எவ்வித காரணமும் இன்றி பழிவாங்கப்படுவது, அச்சுறுத்தப்படுவது, பணியிட மாற்றம் செய்யப்படுவது, பணி நீக்கம் செய்யப்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து அரசையும், துறை அமைச்சரையும் கண்டித்து, கோவை மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பாக நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல் துறையிடம் முறையாக அனுமதி பெறப்பட்டிருந்தது. இதில் ஐஎன்டியுசி மற்றும் பாமகவை சேர்ந்த தொழிற்சங்கத்தினரும் பங்கேற்ற நிலையில், காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக தெரிவித்து, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் உள்ளிட்ட தொழிலாளர்களை சட்ட விரோதமாக கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்துள்ளனர். அரசின் இத்தகைய செயலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: