அதிமுகவை 4 துண்டாக உடைத்த பெருமை மோடியை சேரும்: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு

விருதுநகரில் நேற்று மாணிக்கம் தாகூர் எம்பி அளித்த பேட்டி: கிராமப்புற பெண்களின் கைகளில் பணம் இருப்பதற்காக நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை காங்கிரஸ் உருவாக்கியது. அதை தற்போதைய ஒன்றிய பாஜ அரசு தடுத்துள்ளது. வரும் எம்பி தேர்தலில் இதற்கு கிராமப்புற மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் காங் வேட்பாளர் இளங்கோவன் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். திமுகவின் நல்லாட்சி சாதனைக்கு சான்றாக தேர்தல் வெற்றி அமையும். அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு பயந்து இலங்கைக்கு சென்று விட்டார். அதிமுகவை சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம், பழனிசாமி என 4 துண்டாக உடைத்த பெருமை மோடியை சாரும் என்றார்.

Related Stories: