சிங்காரவேலர் நினைவு தினம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவரும், தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று போற்றப்படுபவருமான ம.சிங்காரவேலர் 78வது நினைவு தினம், சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் கே.சுப்பராயன் எம்.பி. மற்றும் ஏஐடியுசியின் தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி உரையாற்றினார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.சந்தானம், ஏஐடியுசியின் மாநில செயலாளர் ம.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் எஸ்.காசிவிஸ்வநாதன்உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: