சென்னை: சென்னை, கவுரிவாக்கத்தைச் சேர்ந்த மக்கள் பசுமை இயக்க நிறுவனத் தலைவர் நாஞ்சில் சி.மனோகரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கொரோனா தொற்று பரவல் காலத்தில் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கிருமிநாசினி தெளிப்பது போன்ற சுகாதார பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதையடுத்து, 2019-20, 2020-21ம் ஆண்டுகளில் கிருமிநாசினி தெளிக்க எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது, எந்தெந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்ற விவரம் கேட்டு மூன்று முறை தகவல் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்தேன்.
