உலக அமைதிக்காக சைக்கிள் பயணம்: மாமல்லபுரம் வந்த ஜெர்மனி இன்ஜினியர்

மாமல்லபுரம்: ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் பிராங்க் (47). மெக்கானிக்கல் இன்ஜினியர். ஜெர்மனியில்  தனியார் கம்பெனியில் வேலை செய்தார். சில ஆண்டுக்கு முன்பு வாகன விபத்தில் காயமடைந்ததால் பணியை விட்டுவிட்டு உலக அமைதிக்காக, பிளாஸ்டிப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை குறித்து ஜெர்மன் நாடு முழுவதும் சைக்கிளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதையடுத்து உலக முழுவதும் சைக்கிள் பயணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி உலக அமைதி வேண்டியும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை குறித்தும், உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த வலியுறுத்தியும் கடந்தாண்டு ஜெர்மனியில் சைக்கிள் பயணத்தை தொடங்கிய பிராங்க், பல நாடுகளை கடந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார்.

பின்னர், மதியம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சைக்கிளில் இந்தியா உள்ளிட்ட பல நாட்டு தேசிய கொடிகளை பறக்கவிட்டபடி புதுச்சேரி நோக்கி புறப்பட்டார். வழியில் மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் இசிஆர் சாலையில் சென்றவர்களிடம் கையசைத்தவாறு உலக அமைதி, பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமை, பெட்ரோல், டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசு, உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்தாததால் பொருளாதார நெருக்கடி குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Related Stories: