புழலில் கும்பாபிஷேகத்துக்காக வடமாநிலத்தவர்கள் வைத்திருந்த வரவேற்பு வளைவை அகற்ற கோரிக்கை

புழல்: புழல் சக்திவேல் நகரில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களின் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடந்தது. அப்போது, வட மாநிலத்தை சேர்ந்தவர்களை வரவேற்கும் வகையில் புழல் மத்திய சிறைச்சாலை எதிரே உள்ள காந்தி பிரதான சாலை, சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் நுழைவாயில் அமைக்கப்பட்டது. இந்த சாலையில் பல அரசு அலுவலகங்கள், தனியார் மற்றும் அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் என பல செயல்பட்டு வருகிறது. இந்த நுழைவாயிலை கடந்து செல்லும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி பல மணி நேரம் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே இந்த வரவேற்பு நுழைவாயில் நுழைவை உடனடியாக அகற்ற கோரி புழல் போக்குவரத்து போலீசார் மற்றும் 23வது வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. விழா முடிந்து பல நாட்கள் ஆகியும் வரவேற்பு வளைவை அகற்றாததால் புழல் பகுதி மற்றும் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories: