அதானி குழுமத்தின் நெருக்கடி குறித்து விளக்கம் கேட்கப்படும்: எல். ஐ . சி. தலைவர் எம். ஆர். குமார் தகவல்

சென்னை: அதானி நிறுவனத்தின் பங்குகள் நாள்தோறும் தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில் அதானி குழுமத்தின் நெருக்கடி குறித்து உரிய விளக்கம் கேட்கப்படும் என்று எல். ஐ. சி. தலைவர் எம். ஆர். குமார் கூறியுள்ளார்.

அதானி குழும நிதி முறைகேடுகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவின் ஹிண்டன் பெர்க் நிறுவன ஆராய்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து அதானி நிறுவனத்தின் பங்கு மதிப்பு நாள்தோறும் சரிவை சந்தித்து வருகின்றது.

அதானி குழுமத்துடன் தொடர்புடைய வங்கிகளின் பங்குகளும் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. இதை போன்று அதானி குழுமத்தின் 5 நிறுவனங்களின் சுமார் 37,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள

எல். ஐ. சி. யின் பங்குகளும் சரிவை சந்தித்து வருகின்றது.

எதிர் கட்சிகள் மட்டும் முதலீட்டாளர்களால் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில் அதானி குழுமத்தின் நெருக்கடி குறித்து விளக்கம் கேட்கப்படும் என்று எல். ஐ. சி. தலைவர் எம். ஆர். குமார் தெரிவித்துள்ளார்.

தங்கள் முதலீட்டாளர்கள் குழு ஏற்கனவே அதானியிடம் விளக்கம் கேட்டிருந்தாலும் உயர்மட்ட நிருவாக குழுவினர் அதானி குழும நிருவாகிகளை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டவுள்ளதாகவும் அந்நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் குறிவுள்ளார்.

        

Related Stories: