டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு மாநில மாநாடு: அரசு வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்

சென்னை: ‘ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு’ சம்பந்தமான மாநில மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். உள்துறை அமைச்சகத்தின் அறிவுத்தலின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சார்பில், சென்னை அசோக் நகரில் உள்ள காவல் பயிற்சி கல்லூரி வளாகத்தில் ‘ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு’ சம்பந்தமாக மாநில அளவிலான மாநாடு நடந்தது. மாநாட்டை தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். இதில், வணிக ரீதியான பாலியல் சுரண்டல்கள், கொத்தடிமைகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, கட்டாய திருமணம், வீட்டு அடிமைத்தனம், சட்ட விரோதமான தத்தெடுப்பு, பிச்சை எடுத்தல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக தனிநபர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்துவது அடிப்படை மனித உரிமைகளை மீறும் கொடூரமானது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு ஆகியவை குறித்து அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி கல்பனா நாயக், எஸ்பிக்கள் ஜெயஸ்ரீ, கிங்ஸ்லின், துணை கமிஷனர் வனிதா மற்றும் சர்வதேச நீதி இயக்கத்தின் அதிகாரிகள், சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள், தொழிலாளர் துறை சார்ந்த அதிகாரிகள், சட்டப்பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: