சென்னை: வடசென்னை அனல் மின் நிலைய 1வது நிலையின் 3வது அலகில் கொதிகலன் பழுதால், மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
