ரஷ்யாவில் நடக்கும் மாநாட்டில் ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார்

சென்னை: டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்-நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம், ரஷிய நாட்டில் உள்ள குர்ஸ்க்  மாநில ஆளுநர் அழைப்பின் பேரில் 10ம்தேதி வரை  நடக்கும் ரஷ்ய மாட்டில் கலந்துகொள்கிறார். கல்விசார்ந்த பணி, மருத்துவம் சார்ந்த பொதுப்பணியில்  பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு மருத்துவ கல்லூரி மூலம் கட்டணமில்லா மருத்துவம் அளித்தமைக்காக சிறப்பிக்கவும் தலைமையேற்கவும் அழைக்கப்பட்டுள்ளார். குர்ஸ்க் மாநில மருத்துவ பல்கலைகழகத்தின் 88வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசுகிறார்.

மேலும் பல்கலைக்கழகத்தின் முதன்மை கல்வியாளர் விக்டர் 35 ஆண்டு மருத்துவ துறையில் புரிந்துள்ள சேவை, சாதனைகளை கருத்தில் கொண்டு நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்க உள்ளார். ரஷ்ய பயணத்தில் பிரதமரின் கல்வி கொள்கை அடிப்படையில்  குர்ஸ்க் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்துடன் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்-நிகர்நிலை பல்கலைகழகமும், கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த திட்டங்களுக்கான  சில புரிதல் ஒப்பந்தங்களையும் பரிமாற்றிகொள்ள திட்டமிட்டுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: