பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் எஸ்.எஸ்.எல்.வி டி-2 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

சென்னை: பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், எஸ்.எஸ்.எல்.வி டி-2 ராக ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகளில், இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்களை பொருத்தி வெற்றிகரமாக விண்ணில் ஏவி வருகிறது. அதன்படி, சிறிய அளவிலான மைக்ரோ அல்லது நானோ வகை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்காக சிறிய செயற்கைக்கோள் வாகனங்களை எஸ்.எஸ்.எல்.வி போன்ற ராக்கெட்டுகளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இது தொழில் துறை உற்பத்திக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 8 கிலோ எடையுள்ள மைக்ரோ செயற்கைக்கோளான ஆசாதி சாட் -1  செயற்கைக்கோள்களை எஸ்.எஸ்.எல்.வி ஒன் ராக்கெட் விண்ணுக்கு சுமந்து சென்றது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த ராக்கெட் திட்டமிட்ட இலக்கை அடையவில்லை.

இந்த நிலையில், தோல்வியடைந்த எஸ்.எஸ்.எல்.வி ஒன் ரக ராக்கெட்டுக்கு பதிலாக, மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி டி-2 ரக ராக்கெட் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோளான ஆசாதி சாட் -2 தயாரிக்கும் பணியில் இந்தியாவில் இருந்து பல்வேறு மாணவி-மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். அதில், திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10 பேர் இணைந்து 50 கிராம் எடையுள்ள பே லோடு-ஐ வெற்றிகரமாக தயாரித்து இஸ்ரோவிற்கு அனுப்பியுள்ளனர். அந்தவகையில், அந்த பேலோடு, ஆசாதி சாட் -2 செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளது.  

ஆந்திர மாநிலம்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் நாளை காலை 9.18 மணிக்கு ஏவப்படுகின்றது. இந்த ராக்கெட் மூன்று செயற்கைக்கோளை சுமந்து செல்ல உள்ளது. அதன்படி, இந்த எஸ்.எஸ்.எல்.வி டி-2 ரக ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான கவுண்டன் இன்று காலை முதல் தொடங்க உள்ளதாக இஸ்ரோ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: