சென்னை மாநகரில் நடந்த தணிக்கையில் 37 ஆயிரம் வாகனங்களின் முறையற்ற வாகன பதிவு எண் சரிசெய்யப்பட்டது: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகரில் போக்குவரத்து போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையால், 37 ஆயிரம் வாகனங்களின் முறையற்ற வாகன பதிவு எண்கள் சரி செய்யப்பட்டன. சென்னை மாநகர காவல் எல்லையில் மோட்டார் வாகன சட்டம் விதிகள் 50 மற்றும் 51ன் படி, வாகனங்களுக்கான பதிவு எண்கள் மற்றும் தகடுகளின் அளவு சரியாக உள்ளனவா என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போக்குவரத்து போலீசார் மாநகரம் முழுவதும் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 2 வாரங்களாக நடந்த வாகன தணிக்கையில் 27,891 வாகனங்கள் சரியான பதிவு எண்கள் மற்றும் மோட்டார் வாகன சட்டப்படி பதிவு எண் தகடுகள் இல்லாமல் இருந்தது. உடனே போக்குவரத்து போலீசார் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சரியில்லாத வாகன பதிவு எண் தகடுகள் மற்றும் பதிவு எண்கள் அமைப்பது குறித்து விழிப்புணர்வு செய்து அனுப்பி வைத்தனர். அதன்படி கடந்த 2 வாரத்தில் போக்குவரத்து போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையால், சென்னை மாநகரில் 37,197 வாகனங்களில் தவறான வாகன எண் பலகைகள் சரிசெய்யப்பட்டது.

மேலும், பதிவு எண்களில் மோட்டார் வாகன சட்டப்படி எண்கள் அமைத்து இருக்க வேண்டும், தலைவர்கள் படங்கள், கவிதைகள் போன்றவை இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளனர்.

Related Stories: