தி.நகர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சென்னை: தியாகராய நகர் கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற உள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தியாகராய நகர் கோட்டத்திற்கு நுங்கம்பாக்கம் எம்.ஜி.ஆர் சாலையில் உள்ள வள்ளுவர் கோட்டம் துணை மின் நிலையத்தில்  நாளை காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

துணை மின் நிலையங்களில் உள்ள இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தி.நகர் மேற்பார்வை பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: