பாக்.கில் 12 தீவிரவாதிகள் என்கவுன்டரில் பலி

பெசாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள லக்கி மார்வத் மாவட்டத்தில் தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

அப்போது  தீவிரவாதிகள் வாகனம் மூலமாக டேங்க் மாவட்டத்துக்கு தப்பி செல்ல முயற்சித்தனர். அப்போதுஅந்த வாகனத்தை தடுத்து நிறுத்திய வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். வீரர்கள் நடத்திய பதிலடியில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Related Stories: