சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி தீவிரம்..!!

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில்  உள்ள நீர்வழித்தடங்களில் தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி இன்று (08.02.2023) மேற்கொள்ளப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுத்தொல்லை மற்றும் கொசுக்களினால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்களின் உற்பத்தியினைக் கட்டுப்படுத்த ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு கொசுக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணி தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திரு.வி.க.நகர், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பக்கிங்ஹாம் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய்களில் 07.02.2023 அன்று ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இன்று (08.02.2023) தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-36 மற்றும் 37க்குட்பட்ட கேப்டன் காட்டன் கால்வாய், வார்டு-35 மற்றும் 37க்குட்பட்ட கொடுங்கையூர் கால்வாய், வார்டு-36 மற்றும் 45க்குட்பட்ட வியாசர்பாடி கால்வாய், வார்டு-38, 41 மற்றும் 47க்குட்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய், வார்டு-41க்குட்பட்ட லிங்க் கால்வாய்களிலும், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-139க்குட்பட்ட ஆர்.வி. நகர் கால்வாய்,  வார்டு-141க்குட்பட்ட மாம்பலம் கால்வாய், வார்டு-127, 129 மற்றும் 130க்குட்பட்ட விருகம்பாக்கம் கால்வாய், வார்டு-137, 138, 139 மற்றும் 142க்குட்பட்ட அடையாறு ஆறு ஆகியவற்றிலும்,

அடையாறு மண்டலம், வார்டு-169க்குட்பட்ட மாம்பலம் கால்வாய் ஆகியவற்றில் ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-36க்குட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள கேப்டன் காட்டன் கால்வாயில் இன்று (08.02.2023) ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணியினை பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories: