டெல்லி : நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி பதிலுரை அளித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர்,குடியரசு தலைவராக பெண் ஒருவர் பதவி வகிப்பது, நாட்டில் உள்ள பெண்களுக்கு பெரும் ஊக்கத்தை தருகிறது.தொலைநோக்கு சிந்தனையுடன் குடியரசுத் தலைவர் தனது உரையை வழங்கியிருக்கிறார். அவரது உரை நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் உள்ளது.ஊழலற்ற இந்தியா தற்போது உருவாகிக் கொண்டு இருக்கிறது. கொரோனா, போர் அச்சத்திற்கு இடையே நாட்டை வெற்றிப் பாதையில் கொண்டு செல்கிறோம்,என்றார்.
