பிரதமரால் தொழிலதிபர்களை அச்சுறுத்த முடியவில்லையா?: அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்?.. காங். தலைவர் கடும் தாக்கு..!!

டெல்லி: கடந்த 2.5 ஆண்டுகளில் பிரதமரின் நெருங்கிய நண்பரின் சொத்து மதிப்பு 13 மடங்கு உயர்ந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, 2014ல் அதானியின் சொத்து மதிப்பு ரூ.50,000 கோடியாக இருந்த நிலையில் 2019ல் ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்தது. அதன் மாயம் என்ன? நட்புக்கு சாதகமா? என வினவினார். இரண்டு ஆண்டுகளில் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சொத்து உயர்ந்தது எப்படி? என கேள்வி எழுப்பினார். அதானியின் சொத்துகள் பல மடங்கு உயர பிரதமர் மோடியின் நட்பு தான் காரணமா? பிரதமர் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு அதிகரித்ததன் மர்மம் என்ன? என மாநிலங்களவையில் கார்கே கடும் விமர்சனம் செய்தார்.

பிரதமரால் தொழிலதிபர்களை ஏன் அச்சுறுத்த முடியவில்லை?

அதானி விவகாரத்தில் பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்? மற்றவர்களை எல்லாம் பிரதமரால் அச்சுறுத்த முடிகிறது. தொழில் அதிபர்களை மட்டும் ஏன் அச்சுறுத்த முடியவில்லை? என்று கார்கே கேள்வி எழுப்பினார். வெறுப்பு பிரச்சாரம் செய்பவர்களை பார்த்து, பிரதமர் மோடி புருவத்தை உயர்த்தினாலே, தேர்தலில் சீட் கிடைக்காது என அஞ்சி அவர்கள் அமைதியாகிவிடுவார்கள். ஆனால், அவர் அமைதியாக ஒரு மௌன பாபாவாக இருக்கிறார் என கார்கே சாடினார்.

Related Stories: