டெல்லி : பிரதமர் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு அதிகரித்ததன் மர்மம் என்ன என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரின் சொத்துகள் கடந்த 2.5 ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரித்துள்ளது. 2014ல் ரூ.50,000 கோடியாக இருந்த சொத்து மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்ததன் மர்மம் என்ன? நட்புக்கு சாதகமா?, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
