இடைத்தேர்தல் பணிக்காக ஈரோடு சென்றது சிறப்புப்படை போலீஸ்: புகார் கூற கைப்பேசி எண் வெளியீடு..!!

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தல் பணிக்காக சிறப்புப்படை போலீஸ் ஈரோடு சென்றுள்ளது. முதற்கட்டமாக 200 பேர் ஈரோடு சென்றுள்ள நிலையில் மேலும் 5000 பேர் தேர்தல் பணிக்காக ஈரோடு செல்ல உள்ளனர். தேர்தலின் போது தேவைக்கேற்ப அண்டை மாவட்டங்களில் இருந்து 5000 பேர் வரவழைக்கப்படுவர் என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

புகார் கூற கைப்பேசி எண் வெளியீடு:

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜ்குமார் யாதவை 7094488456 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். தேர்தல் செலவின பார்வையாளர் கெளதம் குமாரை 7094488636 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல் விவரம்:

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. இதுவரை மொத்தம் 70  பேர் மனு தாக்கல் செய்து உள்ளார்கள். வேட்பு மனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு வருகிற 10ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார்.

Related Stories: