தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கனமழையால் வெள்ளம்: குடியிருப்புகள், சாலைகளை சூழ்ந்த மழைநீர்..!!

பொலிவியா: பொலிவியாவின் பல்வேறு நகரங்களில் கனமழை வெள்ளத்தால் குடியிருப்புகள், சாலைகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. முக்கிய நகரங்களின் சாலைகளை வெள்ளம் ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சுரங்க பாதைகளை சூழ்ந்த நீரில் இறங்கி வாகனங்கள் மாட்டிக்கொண்டன. கிராமப்புற பகுதிகளில் வீடுகள் வெள்ளத்திற்கு இறையாகியுள்ளன.

5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். வெள்ளம் வடிந்த பகுதிகளில் உள்ள வீதிகள்தோறும் சேரும், சகதியுமாக காட்சியளிப்பதால் தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கனமழை, வெள்ள பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். கிழக்கு பொலிவியால் பெய்த கனமழையால், 30 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் புகுந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories: