குடிபோதையில் தவறி விழுந்தார் மின்சார ரயிலில் ஏற முயன்ற முதியவர் கால் துண்டிப்பு: திருவொற்றியூரில் சோகம்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில், குடிபோதையில் மின்சார ரயிலில் ஏறமுயன்ற முதியவர் தவறி கீழே விழுந்ததில், அவரது கால் துண்டிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, திருவொற்றியூர் ராஜாஜி நகரை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி சாமிநாதன் (50). இவர், நேற்று முன்தினம் பாரத் நகரில் கட்டிட வேலை செய்துவிட்டு, மாலை வீட்டுக்கு செல்ல விம்கோ ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது, கும்மிடிப்பூண்டியில் இருந்து வந்த மின்சார ரயிலில் சாமிநாதன் ஏறுவதற்கு முன் ரயில் புறப்பட்டு விட்டது. இதனால், ரயில் பெட்டியின் கம்பியை பிடித்தவாறு, ஓடிச்சென்று ரயிலில் ஏற முயன்றார். அப்போது நிலை தடுமாறு தவறி கீழே விழுந்தார்.

இதில், ரயில் சக்கரம் ஏறியதில், அவரது இடது கால் தூண்டாகி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து, உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதை பார்த்த, சக பயணிகள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம், சாமிநாதனை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் கொருக்குப்பேட்டை இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாமிநாதன் மது அருந்திவிட்டு போதையில் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Related Stories: