சென்னை மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேர்வு 51 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை: மேயர் பிரியா வழங்கினார்

சென்னை: சென்னை மேல்நிலைப் பள்ளிகளுக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்ட 51 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகளை மேயர் பிரியா வழங்கினார். சென்னை மேல்நிலைப் பள்ளிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 51  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் கட்டிடத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேயர் பிரியா, அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதில், தற்போது தமிழ் பாடப்பிரிவில் 12 ஆசிரியர்கள், ஆங்கில பாடப்பிரிவில் 5 ஆசிரியர்கள், கணிதப் பாடப் பிரிவில் 4 ஆசிரியர்கள், இயற்பியல் பாடப் பிரிவில் 3 ஆசிரியர்கள், வேதியியல் பாடப் பிரிவில் 5 ஆசிரியர்கள், தாவரவியல் பாடப் பிரிவில் 4 ஆசிரியர்கள், விலங்கியல் பாடப் பிரிவில் 4 ஆசிரியர்கள், வணிகவியல் பாடப்பிரிவில் 2 ஆசிரியர்கள், பொருளாதார பாடப்பிரிவில் 6 ஆசிரியர்கள், வரலாறு பாடப் பிரிவில் 2 ஆசிரியர்கள், அரசியல் அறிவியல் பாடப் பிரிவில் ஒரு ஆசிரியர், மனையியல் பாடப் பிரிவில் 2 ஆசிரியர்கள், உடற்கல்வி  பாடப் பிரிவில் ஒரு ஆசிரியர் என ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 51 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி, கல்வி அலுவலர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: