மார்ச் 3 வரை ஈஞ்சம்பாக்கம் மயான பூமி இயங்காது

சென்னை: ஈஞ்சம்பாக்கம் மயான பூமியில் பராமரிப்பு பணி காரணமாக, மார்ச் 3ம்தேதி வரை இயங்காது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு 194, ஈஞ்சம்பாக்கம் அரிச்சந்திரா சாலையிலுள்ள இந்து ஊரூர் மயான பூமியில் உள்ள எரிவாயு தகன மேடையை மின் மயான பூமியாக மாற்றுவதற்காக கடந்த 2ம்தேதி முதல் நேற்று வரை மயான பூமி இயங்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த மயான பூமியில் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, இன்று முதல் மார்ச் 3ம்தேதி வரை மயானபூமி இயங்காது. எனவே, பொதுமக்கள் பெருங்குடி மண்டலம், வார்டு 182க்குட்பட்ட கந்தன்சாவடி மற்றும் அடையாறு மண்டலம், வார்டு 174க்குட்பட்ட பெசன்ட் நகர் எரிவாயு தகன மேடைகளை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: