முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஓபிஎஸ்சும், எடப்பாடியும் சந்திக்க வாய்ப்பில்லை

சென்னை: ஓபிஎஸ், இபிஎஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். தலைமை செயலகத்தில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தலைமை சேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிமுக மகத்தான வெற்றிபெறும். அரசு சுவர்களில் கட்சி சின்னம் வரையக்கூடாது. ஆனால் அங்கு வரையப்பட்டிருக்கிறது. இதை தேர்தல் ஆனையத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். அதேபோல் அரசு இயந்திரம் தவறாக இந்த நேரத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதை நீங்கள் தடுக்க வேண்டும். சுதந்திரமான, ஜனநாயக ரீதியாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தோம். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சந்திக்க வாய்ப்பே இல்லை. முழுமையாக இரட்டை இலையை முடக்கலாம் என ஓபிஎஸ் முயற்சி செய்தார். அது முடியவில்லை. இவ்வாறு கூறினார்.

Related Stories: