தொழிலாளி மகள் அபகரிப்பு அதிமுக நிர்வாகி கைது

அன்னூர்: கோவை மாவட்டம், அன்னூர் அருகே வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி (60). கூலி தொழிலாளி. இவர் அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரில், ‘எனது 2வது மகளை சந்தோஷ் குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தோம். ஆனால் அவர் சந்தோஷ்குமாரை விட்டு பிரிந்து பொத்தியாம்பாளையத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி கோல்ட் செல்வம் என்பவருடன் பழகி அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறார். கடந்த 1ம் தேதி நாங்கள் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களுடன் பழனிக்கு பாதயாத்திரை சென்றோம். அப்போது, தொப்பம்பட்டி பிரிவு அருகே கோல்ட் செல்வம் வந்து எங்களிடம் தகராறு செய்து, ஜாதி பெயரை சொல்லி தரக்குறைவாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். கடந்த 5ம் தேதி எனது வீட்டை சூறையாடினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். புகாரின்பேரில்,  ன்கொடுமை உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்து கோல்டு செல்வத்தை போலீசார் கைது செய்து, மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: