பேனா நினைவுச்சின்னம் சுற்றுச்சூழலை பாதிக்காது: வைகோ பேட்டி

அவனியாபுரம்: பேனா நினைவுச்சின்னம் சுற்றுச்சூழலை எந்தவிதத்திலும் பாதிக்காது என மதுரையில் வைகோ தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும். தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணி ஆழமாக காலுன்றி இருக்கிறது. விக்டோரியா கவுரி நீதிபதியாக அறிவிக்கப்பட்டது மதச்சார்பின்மைக்கு எதிரானது. விக்டோரியா கவுரியை திரும்ப பெற வேண்டும். இஸ்லாமியர்களை, கிறிஸ்தவர்களை மிக மோசமாக விமர்சனம் செய்தவர்.  இவர், நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதை குடியரசு தலைவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். கலைஞரின் சங்கத் தமிழ், காவியத்தின் அடையாளம் பேனா. பட்டேல் சிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பேனா நினைவுச் சின்னத்தால் சுற்றுசூழல் பாதிக்காது. இதற்கு எதிரான பிரசாரம் தேவையற்றது’’ என்றார்.

Related Stories: