ஒரத்தநாடு அருகே நெல்லுபட்டு கிராமத்தில் ட்ரோன் மூலம் உரம் தெளிப்பு செயல் விளக்கம்-வேளாண் கல்லூரி கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

ஒரத்தநாடு : ஒரத்தநாடு அருகே நெல்லு பட்டு கிராமத்தில் கோவை அரசு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் ட்ரோன் மூலம் உயிர்உரம் தெளிப்பு விவசாயிகளிடம் பேராசிரியர் மற்றும் மாணவர்கள் செயல்படுத்தி காட்டினார்.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெல்லு பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கோவை அரசு வேளாண்மை கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவர்கள் வயல்களை தாக்கும் பூச்சிக்கொல்லிகளை ட்ரோன் மூலம் எவ்வாறு மருந்து தெளித்து நச்சுத்தன்மை கொண்ட பூச்சிகளை அழிப்பது என்பதைப் பற்றிய செயல்முறை விளக்கத்தை நெல்லுப்பட்டு கிராமத்தில் நல்லசிவம் என்ற விவசாயிக்கு சொந்தமான 5ஏக்கர்நெல்வயலில் மெத்தைலோ பாக்டீரியம்(பி.பி.எப்.எம்) ட்ரோன் தெளிப்பான் மூலம் களச் சோதனை நடத்தப்பட்டது.

அங்கு கோவை வேளாண் பல்கலைகழகம் நுண்ணுயிரியல் துறை சார்பில் முனைவர்கள் ஆனந்தம், பிரபாகரன், கோமதி, செந்தில்குமார் ஆகிய அறிவியலாளர்கள் மூலம் ட்ரோன் தெளிப்பான் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் பொள்ளாச்சி வாணவராயர் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் பங்கேற்று ட்ரோன் செயல்முறையை அறிந்து கொண்டனர். உயிர் உரம் பி.பி.எப்.எம் குறித்து முனைவர் ஆனந்தம் அவர்கள் கூறியதாவது, \”பி.பி.எப்.எம் உயிர் உரமானது திரவ நிலையில் கிடைக்கிறது. இது விதை முளைப்பு மற்றும் மாற்று வளர்ச்சியை வேகப்படுத்தவும், மகசூல் சதவீதத்தை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அனைத்துப் பயிர்களுக்கும் பரிந்துரைக்கப்படும் பி. பி. எப். எம் உயிர் உரம் பயிர் வளர்ச்சியின் முக்கிய கட்டத்தில் அல்லது 30 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

ட்ரோன் தெளிப்பான் மூலம் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 500 செலவில் களைக்கொல்லிகள், உரங்கள் பயிர்களுக்கு தெளிக்கலாம்.மேலும் ஒரு ஏக்கர் பரப்பு 8 நிமிடத்தில் தெளிக்கமுடியும், கூடுதலான வேலையாட்கள் செலவும் குறைகிறது.இவ்வாறாக ட்ரோன் தெளிப்பான் செயல்முறை விளக்கம் மற்றும் பி.பி.எப்.எம் உயிர் உரத்தின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு விவரிக்கப்பட்டது.

Related Stories: