இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள்; இடைத்தேர்தலில் வரலாற்றை படைப்போம்: முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒற்றுமை உணர்வோடு பணியாற்றி வருகிறோம் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையை கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதிமுகவில் இருதரப்பினரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளனர்.  எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கு.ப.கிருஷ்ணன் எதுவும் நடக்கலாம் என தெரிவித்து இருந்தார். இதனால் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான செங்கோட்டையன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் ஆலய வழிபாட்டோடு நடைபெற்று வருகிறது. இன்று தொடக்க நாளே குபேர மூலையில் தொடங்கப்பட்டு உள்ளது. குபேர மூலை என்றாலே செல்வத்தை பெருக்குவதும், வெற்றியை பெருக்குவதும் ஆகும்.

திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம். நாளை மறுதினம் (பிப்.9) வேட்பாளர் அறிமுக கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெறுகிறது. அதிமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இடைத்தேர்தலில் வரலாற்றை படைப்போம். இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள். ஒற்றுமை உணர்வோடு பணியாற்றி வருகிறோம் என்றும் இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: