ஐகோர்ட் நீதிபதியாக விக்டோரியா கவுரி துரை வைகோ கருத்து

சென்னை: மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ நேற்று அளித்த பேட்டி: ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான விக்டோரியா கவுரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக அறிவித்துள்ளது இந்திய ஒருமைபாட்டுக்கும், தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல, மக்களுக்கு சம நீதி கிடைக்காது, ஏற்புடையதல்ல. விக்டோரியா கவுரி கடந்த கால செயல்பாடுகள் தான் அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக அமர்த்தப்பட்டதற்கு காரணமாக இருக்கும். சந்துரு மற்றும் ஹரி பரந்தாமன் உள்ளிட்ட பொதுவுடைமை இயக்கத்தை சேர்ந்தோர் நீதிபதிகள் ஆன பின் அவர்களின் சொந்த சித்தாந்தத்தை பரப்பவில்லை. கட்சியில் இருந்து விலகி 20 ஆண்டுகளுக்கு பின்னரே அவர்கள் நீதிபதிகள் ஆனார்கள். விக்டோரியா கவுரி உயர்நீதிமன்ற நீதிபதியாக அமர்த்தப்பட்டதன் மூலம் சம நீதி கிடைக்குமா? என பார்த்தால் வரும் காலம் பயமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: