அதானி நிறுவன மோசடி விவகாரம் எல்ஐசி, எஸ்பிஐ முன் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கடன் மற்றும் பங்குகள் என்று பல ஆயிரம் கோடியை அதானி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி நேற்று நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்தது. அதன்படி, வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டை டிப்போ அருகில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், முன்னாள் மாவட்ட தலைவர்கள் டி.வி.துரைராஜ், குணாநிதி, மற்றும் திருவொற்றியூர் சுகுமார், கே.பி.துரை, கவுன்சிலர்கள் தீர்த்தி, சுரேஷ்குமார் மற்றும் சர்க்கிள் தலைவர்கள் ஆர்.கே.நகர் சையத், காலனி சிவா, சக்தி நாகேந்திரன், நஜ்மா ஷெரீப், வீராரெட்டி, அரவிந்த் ஆறுமுகம், ஏ.பி.ஆறுமுகம், ஹரிஷ்வர், லோகநாதன், எண்ணூர் குணசீலன், மணலி ரமேஷ் கலந்து கொண்டனர். தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் தலைமையில் போரூர் எஸ்பிஐ வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் டி.செல்வம் மற்றும் பிரபாகரன், இலக்கியப் பிரிவு துணைத் தலைவர் ஆர்.பூங்கொடி, சாய்ராம், சுரேஷ், முரளி, பீர் முகமது, அம்பத்தூர் பிரகாஷ், ரோமியோ, நாஞ்சில் ரமேஷ், ராமாபுரம் அப்பு கண்ணன், ஆதம் பிரகாஷ், ஜெகன், மோகன், கமலிக்கா காமராஜ், மணி ஆறுமுகம், மேஸ்திரி மோகன், குரு மற்றும் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேபோன்று, எஸ்.சி.பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி முன்னிலையில் அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே.வீ.தங்கபாலு தலைமையில் அடையார் சாஸ்திரி நகர் எஸ்பிஐ வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில துணை தலைவர் தாமோதரன், மயிலை தரணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் கட்சியினர் பொதுத்துறை வங்கிகளை கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று மோடி அரசு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: