10ம் தேதி நெல்லைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு: அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் பேட்டி

நெல்லை: நெல்லைக்கு வரும் 10ம் தேதி வரும் முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு கங்கைகொண்டானில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக வலுவாகவே உள்ளது. அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் 95 சதவீதம் பேர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பல தொகுதிகளில் குக்கர் சின்னத்தால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

இதுபோலவே பாராளுமன்ற தேர்தலிலும் எங்கள் வாக்கு பிரிந்ததால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இவை அனைத்தும் விரைவில் சரியாகி அதிமுக பலம் பெறும். தமிழகத்திற்கு வர வேண்டிய பல திட்டங்கள் வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாளையங்ேகாட்டை கேடிசி நகரில் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள எனது இல்ல திருமண விழாவில் முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். தொடர்ந்து நெல்ைல கிழக்கு பகுதி மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர் சந்திரசேகர் ஆகியோர் இல்ல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

இதற்காக நெல்லை வரும் அவருக்கு கங்கைகொண்டானில் அதிமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உடனிருந்தார்.

Related Stories: