மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக நன்மைக்காக தைப்பூச ஜோதி: பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார்

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி இருமுடி விழா கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி தொடங்கியது. அன்று முதல் பிப்ரவரி  மாதம் 4ம் தேதி வரை 45 லட்சம் பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு சக்தி மாலை அணிந்து மேல்மருவத்தூர் வந்து சித்தர் பீடத்தில் உள்ள கருவறை முன்பாக அமைக்கப்பட்டிருந்த சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்து இருமுடி செலுத்தினர். இந்நிலையில், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச தினமான நேற்று தைப்பூச விழா கோலாகலமாக நேற்று முன்தினம் 4ம்  தேதி விடியற்காலை 3 மணி அளவில் மங்கல இசையுடன் ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, காலை 8:30 மணிக்கு சித்தர்பீடம் பங்காரு அடிகளாருக்கு ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் பாத பூஜை செய்து வரவேற்பளித்தனர். பின்னர், நடந்த அன்னதானத்தை ஆன்மிக இயக்கத்தின் துணை தலைவர்  தேவி ரமேஷ் துவக்கி வைத்தார்.மாலை 4 மணி அளவில் இயற்கை வளம் பெறவும் மனித குலம் நலமுடனும் வளமுடனும் வாழவும் வேண்டி கலச, விளக்கு, வேள்வி பூசை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார்  துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 4.15 மணிக்கு தைப்பூச குருஜோதி ஏற்றும் நிகழ்ச்சி பங்காரு அடிகளார் இல்லத்தின் முன் நடைபெற்றது. இதில், கோ பூஜைக்கு பின் குருஜோதியை லட்சுமி பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார்.

இதனை தொடர்ந்து, தைப்பூச ஜோதி ஊர்வலத்தை ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் அன்பழகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். தைப்பூச ஜோதி ஏற்றப்படும் ஐந்து முக அமைப்பு கொண்ட ஜோதி கலசத்திற்கு பெண்கள் உலக நன்மை வேண்டி பூஜைகள் செய்து பின்னர் ஜோதி கலசத்திற்கு பல்வேறு முறையில் திருஷ்டி கழித்தனர். தொடர்ந்து சுமார் மாலை 7:12 மணிக்கு பங்காரு அடிகளார் தைப்பூச ஜோதினை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து, 5 முக ஜோதியினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், ஜோதி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க அறங்காவலர் உமாதேவி ஜெய்கணேஷ்  துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஆதிபராசக்தி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ரமேஷ், அகத்தியன்,  லேகா செந்தில்குமார்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

விழா ஏற்பாட்டினை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கமும் மற்றும் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்களும், சக்தி பீடங்களும், மன்றங்களும்  செய்திருந்தனர்.

Related Stories: