புகையிலைக்கு மாற்றாக கோழிக்கொண்டை பூ சாகுபடி மும்முரம்-வேதாரண்யம் பட்டதாரி வாலிபர் அசத்தல்

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் புகையிலை சாகுபடிக்கு மாற்றாக கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்து பட்டதாரி வாலிபர் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா மருதூர் வடக்கில் பட்டதாரி வாலிபர் அகிலன் புதிய முயற்சியாக தோட்டக்கலைத்துறை மூலம் 100 சதவீத மானியம் பெற்று தனக்கு சொந்தமான ஒரு ஏக்கரில் கோழிக்கொண்டை பூவினை சாகுபடி செய்துள்ளார். 4 மாத சாகுபடியான இந்த கோழிக்கொண்டை பூ சாகுபடியை வேதாரண்யம் பகுதியில் முதன்முதலாக மேற்கொண்டு உள்ள பட்டதாரி வாலிபர் அகிலன், சாகுபடி குறித்து கூறியதாவது:

தோட்டக்கலைத்துறை மூலம் ஒத்துழைப்பு பெற்று புகையிலை சாகுபடிக்கு மாற்றாக தோழி கொண்டை பூசாகுபடி செய்து உள்ளேன். இந்த பூ கிலோ ரூ.75 முதல் 100வரை சந்தையில் விற்பனையாகிறது. ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யபட்டுள்ள கோழி கொண்டை பூ நான்கு மாத அறுவடையில் ரூ.50 ஆயிரம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். மண்ணையும் மக்களையும் காக்க இந்த முயற்சியில் இப்பகுதியில் முதன்முதலாக ஈடுபட்டுள்ளேன் என்றார். இந்த இளைஞர் போல் முன்னோடி விவசாயிகள் மற்றும் இளம் தலைமுறை விவசாயிகள் புகையிலை சாகுபடிக்கு மாற்றுபயிராக பயிரிட்டால் மண்னையும், மக்களையும் பாதுகாக்கலாம் என்பதில் ஜயமில்லை.

Related Stories: