ஜெலன்ஸ்கியை கொல்ல மாட்டேன் என புடின் வாக்குறுதி: இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பேட்டி

டெல் அவிவ்: உக்ரைன்-ரஷ்யா இடையே கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய போர், ஓராண்டை நெருங்கி உள்ளது. இந்த போரின் ஆரம்ப கட்டத்தில் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட், இரு நாடுகள் இடையே சமாதானம் பேசி வந்தார். கடந்தாண்டு மார்ச் மாதம்   போர் உச்சத்தில் இருந்த போது, ரஷ்ய அதிபர் புடினை சந்தித்த மேற்கத்திய நாடுகளின் தலைவர்களில் நப்தாலி பென்னட்டும் ஒருவராவார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த  பேட்டியில் நப்தாலி பென்னட், ``ஜெலன்ஸ்கியை கொல்ல மாட்டேன்என்று புடின் என்னிடம் வாக்குறுதி அளித்தார். பின்னர் ஜெலன்ஸ்கியைத் தொடர்பு கொண்டு புடின் வாக்குறுதி பற்றி கூறினேன். ஜெலன்ஸ்கி, `நிச்சயமாகவா?’’ என்று கேட்டார். அதற்கு, ``100 சதவீதம் உங்களை கொல்ல மாட்டார்,’’ என்று தெரிவித்தேன் என கூறியுள்ளார்.

Related Stories: