எல்.ஐ.சி., முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறையின் மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் வெளியிட்ட அறிக்கை: மோடி தன்னுடைய நெருங்கி நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ மற்றும் பொதுத் துறை வங்கிகளை, அதானி குழுமத்தில் முதலீடு செய்யுமாறு மோடி அரசு நிர்பந்தித்துள்ளது. பெரும் தொகையை அதானி குழுமத்தில் எல்.ஐ.சி நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ, பிற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை முதலீடு செய்ய நிர்ப்பந்தித்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். மேலும் முதலீட்டார்களை பாதுகாக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை சார்பில் இன்று காலை 10 மணிக்கு அண்ணா சாலையில் அமைந்துள்ள எல்.ஐ.சி கட்டிடம் முன்பு கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Related Stories: