திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டில் நடந்த மாடு விடும் விழாவில் 250 காளைகள் பங்கேற்பு: 25 பேர் மாடு முட்டி காயம்

திருப்பத்தூர்:  திருப்பத்தூர், பெருமாபட்டு  கிராமத்தில்  64ம் ஆண்டு மாடு விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டி 25 பேர் காயம் அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம்  திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு 64ம் ஆண்டு மாடு விடும் திருவிழா நேற்று நடந்தது. இதில் திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம் குப்பம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்ட இந்த மாடு விடும் விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளையும் சட்ட விதிகளையும் விதித்து அனுமதி அளித்தது.

மாடு விடும் விழாவில் குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் அடையும் காளைக்கு முதல் பரிசு மற்றும் பரிசுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 250-க்கும் மேற்பட்ட காளைகள் அசுர வேகத்தில் ஓடியது அதில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஓடிய மாடுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. விழாவில் சில காளைகளின் வாலில் கிளிப்  போட்டு ஓட விட்டனர். மேலும் ஒரு சில காளைகள் நிற்க முடியாமலும் ஓட முடியாமலும் கீழே விழுந்து எழுந்து பொதுமக்கள் மீது மோதி சென்றதால் காளைகள் முட்டி 25க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த சிலரை உயர் சிகிச்சைக்காக  தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: