ராகுல்காந்தி உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் நெருங்கிய உதவியாளரான அலங்கார் சவாயிடம் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகெட் கோகலே கடந்த 25ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பொதுமக்களிடம் இருந்து திரட்டிய பணத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.  இந்நிலையில் அவரது வங்கி கணக்கில் ரூ.23.54லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது குறித்து அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியது.

இதற்கு முன்னாள் வங்கி அதிகாரியும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான அலங்கார் சவாய், சமூக ஊடக பணி மற்றும் ஆலோசனைக்காக இந்த பணத்ைத கொடுத்ததாக அவர் தெரிவித்தார். ஏன் பணமாக கொடுத்தார் என்ற கேள்விக்கு, அவர் மட்டும் தான் இதற்கு பதிலளிக்க முடியும் என்று கோகலே தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அலங்கார் சவாய்க்கு அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வார தொடக்கத்தில் 3 நாட்கள் சவாயிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டு வரும் சவாய் ராகுல்காந்தியின் நெருங்கிய உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: