ஓணம் பண்டிகைக்கு துல்கரின் கிங் ஆஃப் கோதா

சென்னை: துல்கர் சல்மான் நடிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படம் ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகிறது. துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில், துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் இந்தாண்டு ஓணம் அன்று திரைக்கு வருகிறது என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் 2வது போஸ்டர் ஏற்கனவே வௌியாகியுள்ளது. அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ் நாட்டில் காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. அபிலாஷ். என்.சந்திரன் எழுத்தில் உருவாகும் இந்த படம் பான்-இந்திய படம் தயாராகிறது. நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஷ்யாம் ஷஷிதரன் செய்கிறார், ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

Related Stories: