மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் இருபதாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது, உளுந்து, பயறு போன்றவற்றை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் நெல் மற்றும் கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக வயல்களில் தேங்கி அறுவடை செய்ய முடியாத நிலையில், பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும்.

Related Stories: