பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேட்டி

சென்னை: பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும் என அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். ஒன்றிய பட்ஜெட் குறித்த விளக்கக் கூட்டம், சென்னையிலுள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; மகளிர் மற்றும் பாதுகாப்புக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. 3 வது ஆண்டாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 150 விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபேட்கள் அடுத்த சில ஆண்டுகளில் கட்டப்பட உள்ளது. சென்னையை அடுத்த பரந்தூரில், புதிய பசுமை விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும், அதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது; விமான நிலையம் அமைக்க எழுந்திருக்கும் எதிர்ப்புகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மாநில அரசு தான் தீர்வு காண வேண்டும். எங்கள் பணி விமான நிலையம் அமைப்பது மட்டுமே, நிலம் கையக படுத்துவது தொடர்பான அனைத்தும் மாநில அரசு தான் செய்ய வேண்டும் இவ்வாறு கூறினார்.

Related Stories: