அதிமுக அமைப்பு செயலாளராக செந்தில் முருகன் நியமனம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளராக செந்தில் முருகனை நியமித்து ஓபிஎஸ் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். செந்தில்முருகன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தென்னரசு நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்வது திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான இரு அணிகளையும் இணைக்க பாஜ நடத்திய பஞ்சாயத்து தோல்வியில் முடிந்தது.

இதனால் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், ஓபிஎஸ் ஆகியோரை உள்ளடக்கிய பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே இபிஎஸ் தரப்பு வேட்பாளரை ஆதரிக்க ஓபிஎஸ்ஸுக்கு கோரிக்கை வைத்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்தார். இதுபோன்ற உத்தரவால் அதிமுகவில் இரண்டு அணியினரும் குழப்பத்தில் உள்ளனர். தொடர்ந்து பாஜ தரப்பில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் வாங்க முடிவு எடுத்தார். அதன் அடிப்படையில் வேட்பாளர் செந்தில்முருகன் தற்போது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவரை அதிமுக அமைப்பு செயலாளராக நியமித்து உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; அதிமுக செயலாளராக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் முருகன் இன்று நியமிக்கப்படுகிறார். அதிமுக நிர்வாகிகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக நிர்வாகிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளராக ஓபிஎஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: