பிப்ரவரி 24 முதல் 26 வரை சட்டீஸ்கரில் காங். மாநாடு

புதுடெல்லி: சட்டீஸ்கரில் பிப்.24 முதல் 26ம் தேதி வரை 3 நாள் காங்கிரஸ் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமைக்கு ஒப்புதல் அளிக்கவும், கட்சி தேர்தல்  தொடர்பாகவும், புதிய பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக விவாதிக்கவும் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெறும் என்று  காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு இதுவாகும். இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், இமாச்சல் முதல்வர் சுக்வீந்தர் சிங் சுக்கு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் இந்த மூன்று நாள் மெகா மாநாட்டில் பங்கேற்பார்கள்.

அங்கு அனைத்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள், மாநாட்டு பிரதிநிதிகளும் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜுன் கார்கேவின்  பதவிக்கு ஒப்புதல் அளிப்பார்கள்.

Related Stories: